Thursday, May 8, 2014

2ஜி வழக்கு: கனிமொழி வாக்குமூலம் பதிவு

கனிமொழி
கனிமொழி
   இரண்டாம் தலைமுறை     அலைக்கற்றை ஒதுக்கீட்டில்   முறைகேடுகள் நடந்ததாகக்   கூறப்படும் 2 ஜி வழக்கில்   குற்றம் சாட்டப்பட்டுள்ள     கனிமொழியின்    வாக்குமூலத்தை இன்று  வியாழக்கிழமை டில்லி  சிறப்பு சிபிஐ நீதிமன்றம்  பதிவு செய்தது.
  இந்த வழக்கில் குற்றம்    சாட்டப்பட்டுள்ள முன்னாள்    மத்திய அமைச்சர் ஆ.ராசா    உள்ளிட்ட மூன்று பேரிடம் இதுவரை வாக்குமூலம் பெறப்பட்டுள்ள    நிலையில், திமுக மாநிலங்களவை உறுப்பினரும், அக்கட்சியின்    தலைவர் மு.கருணாநிதியின் மகளுமான கனிமொழியிடம் இன்று    வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
  கனிமொழியின் வாக்குமூலத்தில், இரண்டாம்    தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்ததாகக்  கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான விசாரணையின்  ஒரு பகுதியாக, ஸ்வான் டெலிகாம் நிறுவனம்  கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ.200 கோடி வரை நிதி  வழங்கியுள்ளது என்று சிபிஐ எழுப்பிய சர்ச்சையில்  அவருடைய தொடர்பு குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
 இந்த பணப் பரிமாற்றம் நடைபெற்றதாக குறிப்பிடப்படும்  காலக்கட்டத்தில் தான் அந்த நிறுவனத்தில் எந்த ஒரு முக்கிய  பொறுப்பையும் வகிக்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.  அதனால் இது தொடர்பில் எந்த ஒரு முடிவையும் எடுக்கும்  அதிகாரம் தனக்கு இல்லை என்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
 மேலும் கலைஞர் தொலைக்கட்சியில் அந்நிறுவனத்தின்  இயக்குனராக கடந்த 2007ம் ஆண்டின் ஜூலை மாதத்தில் ஒரு சில  வாரங்கள் மட்டுமே நீடித்ததாக சுட்டிக்காட்டியுள்ள கனிமொழி,  பின்னர் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ஏற்றுக்கொண்டதால்  கலைஞர் டிவியின் வேறு எந்த பொறுப்பிலும் நீடிக்கவில்லை  என்றும் தெரிவித்திருக்கிறார்.
 இந்த பணப் பரிவர்த்தனை விவகாரம் தொடர்பில், கலைஞர்தொலைக்காட்சி நிர்வாகம் முன்பு வெளியிட்ட அறிக்கையில், டி.  பி. குரூப் நிறுவனமான சினியூக் பிலிம்ஸிடமிருந்து பங்குகள் பரிவர்த்தனைக்காக 214 கோடி ரூபாய் முன்பணமாகப் பெறப்பட்டதாகவும், ஆனால் பங்கு விலையை நிர்ணயிப்பதில் ஏற்பட்ட முரண்பாட்டால் அந்தத் தொகை, வட்டியுடன் திருப்பித் தரப்பட்டுவிட்டதாகவும், அந்த பண பரிவர்த்தனை குறித்து வருமான வரித்துறைக்கும் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டிருந்தது.
ஆ ராசாவின் வாக்குமூலம்
ஆ ராசா
ஆ ராசா
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவிடம், கடந்த மே 5ஆம் தேதி அன்று வாக்குமூலம் பெறப்பட்டபோது, சிபிஐ தரப்பில் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு அவர் மறுப்பு தெரிவித்திருந்தார். அத்தோடு அவர்களது குற்றப் பத்திரிக்கையில் கூறியுள்ளது போல் முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லை என்றும் கூறிய அவர், 2ஜி தொடர்பான அனைத்து விவகாரங்களிலும் புதியதாக வகுக்கப்பட்ட அரசின் கொள்கையின் அடிப்படையிலேயே தான் முடிவுகள் எடுத்ததாக வாக்குமூலத்தை பதிவு செய்தார்.
சிபிஐ தரப்பில் இந்த வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட இரண்டு குற்றப் பத்திரிக்கையில் இடம் பெற்றுள்ள 17 பேரின் வாக்குமூலப்பதிவுகள் மே 5ஆம் தேதி துவங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
முன்னதாக அவர்கள் அனைவருக்கும் வழங்கப்படிருந்த 824 பக்கங்களை கொண்ட 1,718 கேள்விகளுக்கு, சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வாக்குமூலம் பதிவு துவங்கிய நாளான மே 5ம் தேதி அன்று எழுத்துப்பூர்வமான பதில்களை சமர்ப்பித்தனர்.
அதன் அடிப்படையில் ஒவ்வொருவரிடமும் நீதிபதி நேரடியாக கேள்விகளை எழுப்பிப் பதிலைப் பெற்ற பின்னர், அவர்களது எழுத்துப்பூர்வமான பதில்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று அப்போது தெரிவிக்கப்பட்டது.
கடந்த திங்களன்று தொடங்கிய இந்த வாக்குமூலப் பதிவை, இந்திய முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசாவிடம் இருந்து சிறப்பு சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஒ.பி.சாய்னி துவங்கினார். நேரடியான உரையாடல் மூலம் பதிவு செய்யப்படவுள்ள இந்த வாக்குமூலத்தில், கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டுமா வேண்டாமா என்பதை குற்றம் சுமத்தப்பட்டவர்கள் தீர்மானித்துக் கொள்ளலாம் என்றும் நீதிபதி அப்போது குறிப்பிட்டார்.

400 நிறுவனங்கள் திருப்பி செலுத்தாத வாராக் கடன் ரூ.70 ஆயிரம் கோடி

24 பொதுத் துறை நிறுவனங்களில் வாராக் கடன் தொகை கடந்த 5 ஆண்டுகளில் ரூ.39 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.2.36 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.
வங்கிகளுக்கு வாராக் கடனை திரும்பச் செலுத்தாத 406 தனியார் நிறுவனங்களின் பட்டியல் சென்னையில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.
இந்தப் பட்டியலை அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.ஹெச்.வெங்கடாசலம், தமிழ்நாடு வங்கி ஊழியர் சம்மேளனத்தின் இ.அருணாசலம் உள்ளிட்டோர் வெளியிட்டனர்.
அதைத் தொடர்ந்து அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியது:
வங்கித் துறைக்கு தற்போது சோதனைக்காலம் என்றே கூறலாம். நமது நாட்டில் வாராக் கடன் வைத்திருப்போரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஆனால் இது தொடர்பாக அரசு மற்றும் ரிசர்வ் வங்கி இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்க முன்வராதது வேதனைக்குரியது.
வருமான வரி செலுத்தாதவர்கள் பட்டியலை அரசு வெளியிடுவதைப் போலவே வாராக்கடன் பட்டியலையும் உடனுக்குடன் வெளியிட வேண்டும்.
இது குறித்து மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், வாராக் கடன் வைத்திருப்போர் பட்டியலை அரசு வெளியிட்டால் இந்தியாவின் தொழில் வளர்ச்சி பாதிக்கப்படும் என்று கருத்து தெரிவித்துள்ளார். ஆனால் அவ்வாறு வெளியிடாவிட்டால் மக்களின் வங்கி சேமிப்பு, வாழ்வாதாரம் மற்றும் நாட்டின் பொருளாதாரம் ஆகியவை கடுமையாக பாதிக்கப்படும் என்பதை அவர் கருத்தில் கொள்ள வேண்டும்.
இந்தியா முழுவதும் மக்களின் பணம் சுமார் 75 லட்சம் கோடி ரூபாய் வங்கிகளில் வைப்புத்தொகையாக உள்ளது. பெரிய நிறுவனங்கள் மற்றும் பிரபலமான தொழிலதிபர்களுக்கு கொடுக்கப்பட்ட கடன்கள் நீண்ட காலமாகியும் செலுத்தப்படவில்லை. வங்கிகளில் வைப்புத் தொகை உள்ளிட்ட முதலீடுகளைச் செய்துள்ள மக்களுக்கு பாதுகாப்பு தர வேண்டிய பொறுப்பு அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் போன்ற அமைப்புகளுக்கு உள்ளது.
எனவேதான் இதனைக் கண்டித்து கடந்த ஆண்டு (2013) டிசம்பர் 5-ஆம் தேதி வாராக்கடன் செலுத்தாத 50 பேரின் பெயர் பட்டியலை நாங்கள் வெளியிட்டோம். ஆனால் அதற்கு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதைத் தொடர்ந்து மக்களவைத் தேர்தலின்போது வாராக் கடனை வைத்திருப்போர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என தேர்தல் ஆணையரை சந்தித்து கோரிக்கை வைத்தோம். ஆனால் அங்கும் எங்கள் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
தற்போது இந்தியாவில் உள்ள வங்கிகளுக்கு சுமார் ரூ.70,300 கோடி வாராக் கடனை செலுத்த வேண்டிய 406 நிறுவனங்கள் மற்றும் தொழிலதிபர்களின் பெயர் பட்டியலை வெளியிடுகிறோம்.
இந்த பட்டியலில் நாடாளுமன்ற உறுப்பினரும், கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த தொழிலதிபருமான விஜய்மல்லையாவின் பெயர் உள்ளது. அவர் சுமார் 7 ஆயிரம் கோடிக்கு மேல் வாராக்கடனை வைத்துக்கொண்டு கிரிக்கெட் போட்டிகளுக்கு ஆடம்பரமாக செல்வது உள்ளிட்ட கேளிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். இதற்கு மத்திய அரசுதான் பதில் சொல்ல வேண்டும்.
தற்போது வெளியிடப்பட்டுள்ள பட்டியலுக்கும் அரசிடமிருந்து வழக்கம்போல் எந்தப் பதிலும் வராவிட்டால் அடுத்தடுத்த மாதங்களில் முறையே 3,250, 7,000 பெயர்கள் கொண்ட பட்டியல்களை வெளியிடுவோம்.
ஒருபுறம் வாராக்கடன் அதிகரித்துக் கொண்டே இருக்கும் நேரத்தில் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல வாராக்கடன் பெற்றவர்களுக்கு புனரமைப்பு என்ற பெயரில் திரும்பச் செலுத்தக் கூடிய கடனுக்குச் சலுகைகள் வழங்கப்படுகின்றன. மேலும் பலரின் கடன்கள் ரத்து செய்யப்படுகின்றன. கடைசி 10 மாதங்களில் ரூ.2,40,000 ஆயிரம் கோடி வாராக்கடனை அரசு ரத்து செய்துள்ளது. அரசின் இந்த நடவடிக்கைகள் பெரும் பொருளாதார சீர்குலைவுக்கு வழிவகுத்து விடும். இதைத் தடுக்க வங்கிகளிடம் பெற்ற வாராக் கடனைத் திரும்பச் செலுத்தாதவர்கள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட வேண்டும்.
வாராக் கடனை திரும்ப வசூலிக்க அரசும் ரிசர்வ் வங்கியும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். "மக்கள் பணம் மக்களின் மேம்பாட்டுக்கே' என்ற கூற்றை மெய்ப்பிக்கும் வரை எங்கள் சங்கங்கள் சார்பில் தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வோம். எங்களின் நடவடிக்கைகளை எதிர்த்து புது தில்லியில் உள்ள "டெக்னோ மேக்' என்ற நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. அதனைக் கண்டித்து புது தில்லியில் விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம் என்றனர்.

Thursday, May 1, 2014

தொழிலாளர் தினம்: மே-1





தொழிலாளர் தினம்: மே-1

மே தினம் எனப்படும் உலகத் தொழிலாளர் தினம் ஆண்டுதோறும் மே முதலாம் தேதி உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுவதாகும்.

தொழிலாளர் தினம்: மே-118-ம் நூற்றாண்டின் இறுதியிலும் - 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதற்கெதிரான குரல்களும் பல்வேறு நாடுகளில் ஆங்காங்கே எழத் துவங்கியது. இதில் குறிப்பிடத்தக்கது இங்கிலாந்தில் தோன்றிய சாசன இயக்கம் (chartists). சாசன இயக்கம் 6 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தொடர் இயக்கங்களை நடத்தியது. அதில் குறிப்பிடத்தக்கது 10 மணி நேர வேலை கோரிக்கை 

1830களில் பிரான்சில் நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் தினமும் கட்டாயமாக 15 மணி நேரம் உழைக்க வேண்டி இருந்தனர். இதை எதிர்த்து அவர்கள் பெரும் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தினர். 1834இல் ஜனநாயகம் அல்லது மரணம் என்ற கோஷத்தை முன்வைத்து பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இவையனைத்தும் தோல்வியில் முடிவடைந்தன.

ஆஸ்திரேலியாவில் மெல்பேர்னில் கட்டிடத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் உலகிலேயே முதன் முதலாக 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து 1856இல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, வெற்றியும் பெற்றனர். இது தொழிலாளி வர்க்க போராட்டத்தின் மைல் கல்லாக அமைந்தது.

சார் மன்னரின் ஆட்சியின் கீழ் ரஷ்யத் தொழிலாளிகள் பெரும் துன்பங்களுக்கு ஆளானார்கள். இங்கும் 1895 - 1899க்கு இடைப்பட்ட காலத்தில் நூற்றுக்கணக்கான வேலை நிறுத்தங்கள் நடைபெற்றன. 1896 ஏப்ரல் மாதத்தில் லெனின் மே தினத்திற்காக எழுதிய சிறு பிரசுரத்தில், ரஷ்யத் தொழிலாளிகளின் நிலைமை குறித்து விரிவாக அலசியதோடு, ரஷ்யத் தொழிலாளர்களின் பொருளாதார போராட்டம் - அரசியல் போராட்டமாக எழுச்சிக் கொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்தினர். தொழிலாளிகளின் 8 மணி நேர வேலைக்கான போராட்டங்களே ரஷ்யப் புரட்சிக்கு வித்திட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் 1832இல் பொஸ்டனில் கப்பலில் பணியாற்றிய தச்சுத் தொழிலாளர்கள் 10 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து வேலை நிறுத்தம் செய்தனர். அதே போல், 1835இல் பிலடெல்பியாவிலும், பென்சில்வேனியாவிலும் இதே கோரிக்கையை முன்வைத்து இயக்கம் நடத்தப்பட்டது. பென்சில்வேனியாவில் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களும், இரயில்வே தொழிலாளர்களும் குறைவான வேலை நேரத்தை வலியுறுத்தி 1877இல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர் இயக்கங்களை இணைத்து “அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு” என்ற இயக்கம் உருவாக்கப்பட்டது. இவ்வியக்கம் 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து இயக்கங்களை நடத்தியது. அத்தோடு மே 1, 1886 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது. இவ்வியக்கமே மே தினம் பிறப்பதற்கு காரணமாகவும் அமைந்தது.

தொழில் நகரங்களான நியூயார்க், சிகாகோ, பிலடெல்பியா, மில்விக்கி, சின்சினாட்டி, பால்டிமோர் என அமெரிக்கா முழுவதும் 3,50,000 தொழிலாளர்கள் பங்கேற்ற மாபெரும் வேலை நிறுத்தம் துவங்கியது. இவ்வேலை நிறுத்தத்தில் 1200க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் உள்ள தொழிலாளர்கள் பங்கெடுத்துக் கொண்டனர். தொழிலாளர்களின் எழுச்சிமிக்க வேலை நிறுத்தத்தினால், அமெரிக்க பெரு நிறுவனங்கள் மூடப்பட்டன. இரயில் போக்குவரத்து நடைபெறவில்லை. வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற தொழிலாளர் ஊர்வலங்கள் அமெரிக்காவை உலுக்கியது. மிச்சிகனில் மட்டும் 40,000 தொழிலாளர்களும், சிக்காகோவில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்.

மே 3, 1886 அன்று “மெக்கார்மிக் ஹார் வஸ்டிங் மெஷின் நிறுவனத்தின்” வாயிலில் 3000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அணி திரண்டு கண்டனக் கூட்டத்தை நடத்தினர். இங்கு இடம்பெற்ற கலவரத்தில் 4 தொழிலாளர்கள் காவற்துறையினரின் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியாயினர். இச்சம்பவத்தை கண்டிக்கும் வகையில் ஹேமார்க்கெட் சதுக்கத்தில் மே 4 அன்று மாபெரும் கண்டன கூட்டம் ஒன்றை நடத்தினர் தொழிலாளர்கள். 2500 தொழிலாளர்கள் கலந்து கொண்ட கண்டனக் கூட்டம் அமைதியான முறையில் நடைபெற்றது. இந்நேரத்தில் காவல்துறையினர் அனைவரையும் கலைந்து செல்லுமாறு கூறினர். இவ்வேளையில் திடீரென்று கூட்டத்தில் வெடிகுண்டு வீசப்பட்டதில் அந்த இடத்திலேயே ஒரு காவல்துறையினர் பலியானார். பின்னர் போலீசார் கூட்டத்தினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தித் தொழிலாளரைத் தாக்கினர். அத்துடன் தொழிலாளர் தலைவர்களை கைது செய்து வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கு ஜூன் 21, 1886 அன்று துவங்கியது. 7 பேருக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது. இந்நிகழ்வு ஹேமார்க்கெட் படுகொலை என அழைக்கப்படுகிறது. இந்த நிகழ்வினை ஒட்டி‍ அந்த ஹேமார்க்கெட் சதுக்கத்தில் நினைவுச் சின்னம் உருவாக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 11, 1887 அன்று தொழிலாளர் தலைவர்கள் ஆகஸ்ட் ஸ்பைஸ், ஆல்பேர்ட் பார்சன்ஸ், அடொல்ஃப் ஃபிஷர், ஜோர்ஜ் ஏங்கல் ஆகியோர் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர். நவம்பர் 13, 1887 அன்று நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் அமெரிக்க தேசமே அணி திரண்டது. நாடு முழுவதும் 5 லட்சம் பேர் இவர்களது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டதோடு, அமெரிக்கா முழுவதும் கறுப்பு தினமாக அனுஷ்டிக்கப்பட்டது.

அமெரிக்க தொழிலாளர்களின் 8 மணி நேர வேலைக்கான போராட்டமும், சிகாகோ தியாகிகளின் தியாகமும்தான் இன்றைக்கு மே தினமாக - உழைப்பவர் தினமாக நம்முன் நிற்கிறது.

1889 ஜூலை 14 அன்று பாரீசில் சோசலிசத் தொழிலாளர்களின் ‘’சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம்’’ கூடியது. 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் உட்படப் பலர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி நேர போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்றும், சிக்காகோ சதியை இம்மாநாடு கடுமையாக கண்டித்ததோடு, 1890 மே 1 அன்று அனைத்துலக அளவில் தொழிலாளர்கள் இயக்கங்களை நடத்திட வேண்டும் என்றும் அறைகூவல் விடப்பட்டது.

இந்த அறைகூவலே மே முதல் நாளை, சர்வதேச தொழிலாளர் தினமாக, மே தினமாக அனுஷ்டிப்பதற்கு வழிவகுத்தது.

இந்தியாவில் சென்னை மாநகரில் முதன்முதலில் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. பொதுவுடைமைவாதியும் தலைசிறந்த சீர்திருத்தவாதியும் ம. சிங்காரவேலர் 1923 -இல் சென்னை உயர்நீதிமன்றம் அருகே உள்ள கடற்கரையில் தொழிலாளர் தின விழாவைக் கொண்டாடினார்
.

NFTCLன் எல்லை விரிகின்றது

கேரளாவில் எழுச்சிமிகு NFTCL மாநில அமைப்பு கூட்டம்

      27-4-14  காலை 11 மணி அளவில் கேரளாவில் 

உள்ள  எர்ணாகுளம்  மாவட்டம்  பெரம்பாவூரில், 

NFTE மாநில தலைவர் தோழர் ராதாகிருஷ்ணன் 

தலைமையில் NFTCL மாநில அமைப்புக் கூட்டம் 

நடைபெற்றது.

தோழர் ராதாகிருஷ்ணன் தனது தலைமையுரையில், இலாகா பணியிலிருந்து சில மாதங்களுக்கும் முன் ஓய்வு பெற்ற பின்னும், ஓய்வு எடுத்துக் கொள்ளாமல், நமது தொலைத் தொடர்பு துறையில் கடும் சுரண்டலுக்குஆளாகும் ஒப்பந்த ஊழியர்களை அணி திரட்ட,அவர்களுக்கும் நல்லது செய்ய வேண்டும் என்ற லட்சிய வெறியோடு செயல்படும் தோழர் மதிவாணன் அவர்களை மனமுவந்து வரவேற்பதாக கூறியது நெகிழ்ச்சி தருவதாக அமைந்தது.   தோழர் C.K.மதிவாணன், அகில இந்திய துணைப் பொதுச்செயலர்  சிறப்புரை ஆற்றினார். NFTCL துவங்கப்பட்டதன் நோக்கம், லட்சியம் ஆகியவற்றை விளக்கினார். 


AITUC, அகில இந்திய அமைப்பின் வழிகாட்டுதலோடு NFTCL துவக்கப்பட்டுள்ளது. 

BSNLல் தற்போது 60 சத பணிகளை ஒப்பந்த ஊழியர்கள்தான் 
செய்து வருகின்றனர். ஒருசில வருடங்களில் நிரந்தர ஊழியர்களே இல்லை என்ற நிலையை உருவாக்கி அப்பாவி ஒப்பந்த ஊழியர்களை சுரண்ட திட்டமிடும் அரசின் சதியை முறியடிக்க வேண்டும். AirTel, 
Vodofone போன்ற  தனியார் துறையில் பணியாற்றும் ஒப்பந்த 
ஊழியரின் நிலைமை இதைவிட மோசமாக உள்ளது. இது போன்ற பிரச்னைகளை அகில இந்திய அளவில் எடுத்து தீர்த்திடவே NFTCL துவக்கப்பட்டுள்ளது. இந்தியாவெங்கும் பல மாநிலங்களில் 
ஒப்பந்த ஊழியர்கள் அமைப்புரீதியாக திரண்டு வருகின்றனர்.
அவர்களை ஒருங்கிணைத்து NFTECL விரைவில் அகில இந்திய அமைப்பாக பரிணமிக்கும் என்று விளக்கினார் தோழர் C.K.M.

கடந்த 4 ஆண்டுகளாக  BSNLEU சங்கத்தின் தவறான  உடன்பாடு  காரணமாக BSNL ஊழியர்க்கு போனஸ் மறுக்கபட்டபோதும், 
தோழர் ஆனந்தன், கடலூர் மாவட்டச் செயலராக காண்ட்ராக்ட் ஊழியர்க்கு போனஸ் பெற்ற சாதனையை விளக்கினார். 

கேரளத் தலைவர்கள் கேரள மாநிலச் செயலர் 

தோழர் தர்மதாஸ், அகில இந்திய நிர்வாகி 

தோழர் மைக்கேல், மூத்த தோழர் பௌலோஸ் 

உட்பட பலர் கலந்துகொண்டனர்.

NFTCL -ன் தமிழ் மாநில செயலர் தோழர் ஆனந்தன் 

தமிழகத்தில்  காண்ட்ராக்ட் ஊழியர்களுக்கு செய்த 

சாதனைகளை விளக்கி சிறப்புரை ஆற்றினார்.

சமீபத்தில் கடலூரில் இறந்த ஒப்பந்த ஊழியரின்  

குடும்பத்தாருக்கு இழப்பீடு பெற்று கொடுத்ததோடு 

அவரது மனைவிக்கு வேலை வாங்கிக் கொடுத்ததையும் 

விளக்கினார். 

தோழர் மோகன் குமார் கேரளா  NFTCL - ன் மாநிலச் செயலராக தேர்வுசெய்யப்பட்டார்.


கடலூரிலிருந்து மாநில செயலர் தோழர் S.ஆனந்தன் தலைமையில் மாநில உதவி செயலர்( NFTCL ) 

தோழர் .K.முத்துக்குமார் TTA  உள்ளிட்ட 5 தோழர்களும் 



கோவையிலிருந்து தோழர்கள் சுப்பராயன், ராமகிருஷ்ணன், NFTCL  மாநில அமைப்பு செயலர்  தோழர் குமரேசன் உள்ளிட்ட தோழர்களும்   கலந்து  கொண்டு சிறப்பித்தனர் 

 புதிய நிர்வாகிகளுக்கு நமது மாவட்ட சங்கத்தின்  சார்பிலும் நெய்வேலி கிளையின் சார்பிலும் வாழ்த்துக்களை உரித்தாக்குகின்றோம்.













































Friday, April 11, 2014

காரைக்குடி வெப்சைட்டிலிருந்து

காரைக்குடி RSU  தொலைபேசி நிலையத்தில்
 காவலராகப் பணிபுரிந்த 

தோழர்.ஆரோக்கியசாமி

10/04/2014 அன்று உடல் நலக்குறைவால் உயிர் நீத்தார். 

காலையில் பணி முடித்தார்.. 
மாலையில் காலன் அவர்தம் உயிர் முடித்தான். 
ஏறத்தாழ 15 ஆண்டுகள் காவலராக ஒப்பந்த முறையில் பல்வேறு ஒப்பந்தக்காரர்களிடம் பணி புரிந்தார். ஒப்பந்த ஊழியராக வாழ்ந்து உயிர் நீத்ததனால் ஒரு பலனும் அவரது  குடும்பத்தாருக்கு கிட்டாது. 

அவரது இறப்பை விட இதுவே பெருங்கொடுமை. 

"ஒப்பந்த ஊழியர்கள் அனைவருக்கும் ஆயுள் காப்பீட்டுத்திட்டம் 
அமுல்படுத்தப்பட வேண்டும்" 

என்பது காரைக்குடி சிறப்பு 

மாநாட்டுத்தீர்மானம். 

அது நிறைவேற்றப்படும் அன்றுதான் 

தோழர்.ஆரோக்கியசாமியின் 

ஆன்மா அமைதியடையும் . 


காரைக்குடியில் நேற்று 10-04-2014 அன்று உடல் நலக்குறைவால் உயிரிழந்த தோழர்: ஆரோக்கியசாமி அவர்களின் குடும்பத்திற்கு நமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.


15 ஆண்டுகள்  பணிபுரிந்த தோழருக்கு எந்த பலனும் இல்லை என்றும்.ஒப்பந்த ஊழியர்களுக்கு ஆயுள் காப்பிட்டுத்திட்டம் அமல்படுத்த வேண்டும் என்பது காரைக்குடி சிற(ரி)ப்பு மாநாட்டின் தீர்மானமாம்.
இதில் வேடிக்கை என்னவென்றால் இவர்கள் யாரை தலைவர்/பொதுசெயலர் என்று கூறுகிறார்களோ அவர்கள் இத்தனை ஆண்டு காலம் குறட்டை விட்டு கும்பகர்ண தூக்கம் போட்டது ஏன் ?                                                     (இன்னமுமா இந்த ஊர் நம்மள நம்புது )
             
சிறப்பு மாநாட்டின் அம்சம் என்ன?தொழிசங்கத்தின் பெயரே தெரியாதவர்கள் நடத்தியதுதான் மாநாடு 
TMTCLU என்பதன் அர்த்தம் என்ன. தமிழ் மாநில தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் என்பதே அதன் பொருள்.ஆனால் இவர்கள் கூறுவதோ தமிழக தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் என்று.இதில் TMTCLU எங்கே வருகிறது .(TNTCLU )
   TMTCLU என்ற அமைப்பை முறையாக செயல்படுத்தி அச்சங்கத்தை கட்டிக்காத்த பெருமை கடலூர் மாவட்டத்திற்கும் குறிப்பாக எங்கள் தோழன் S.ஆனந்தன்  அவர்களுக்குமே சாரும் . 
 காரைக்குடி மாநாட்டின் தீர்மானம் அனைத்தும் எங்கள் தோழன் ஆனந்தன் அவர்களால் பல ஆண்டுகளுக்கு முன்னரே கடலூர் மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதை பெருமையோடு தெரியபடுத்த விரும்புகின்றோம்.கடந்த 01-10-2009 அன்று முதன் முதலாக மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்த ரூ.90  ஊதியம் கிடைக்க வழிவகுத்தார் (அதற்க்கு முன் ரூ.53 மட்டுமே பெற்றோம்)பின்பு அசுரவேகம் காட்டி மத்திய அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச கூலி மற்றும் VDA,     EPF ,     ESI    போன்ற அனைத்து சலுகைகளும் பெற்றுதந்துள்ளார்.                             ( மாநில சங்ககளின் உதவி இல்லாமல் )
 இன்று பலர் ESI  கார்டை பயன்படுத்தி மருத்துவ வசதி பெறுகின்றோம் என்றால் அதற்கும் ஆனந்தனே காரணம் . ஆனந்தன் போராடிப்பெற்று  தந்த ESI  திட்டத்தின் பயனாக கடந்த 2011-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் நெய்வேலி தோழர் ஆறுமுகம் என்பவர் உயிழிழந்தார்.  மாற்று சங்க தோழர் என்றும் பாராமல் அவரின் குடும்பத்திற்கு  இழப்பீடாக ரூ .ஒரு லட்சம் பெற்றதும் EPF திட்டத்தின் பயனாக குடும்ப பென்சன் பெற்றதும் அத்தோழரின் துணைவியாருக்கு நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியர் பணிப்பெற்று தந்தது ,விருத்தாசலம் A/C OPPERATOR  தோழர் மணி  அவர்கள் மரணமடைந்த  போது அவரது குடும்பத்திற்கு நிவாரணம் மற்றும் அவரது துணைவியாருக்கு நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியர் பணிபெற்றது.தீவிபத்தில் பதிக்கப்பட்ட தோழர் குடும்பத்திற்கு   
நிவாரணம் அளித்தது.கடலூர் தோழியர் வள்ளி சிறுநீரக ஆப்பரேசன் பைசா செலவின்றி செய்தது.தோழர் ராஜேஷ் அவர்கள் பாண்டி அரவிந்தர் கண் மருத்துவமனையில் கண்சிகிச்சை செய்தது இப்படி பல வகையில் சங்கம் பாராமல், ஜாதி பார்க்காமல் அனைத்து தோழர்களுக்கும் தோழியர்களுக்கும் அனைத்தும் பெற்று தந்துள்ளார்.
இன்று தமிழத்தில் எந்த மாவட்டத்திலும் இல்லாத வகையில் 30 நாட்களுக்கும் ஊதியம் பெற்று தந்துள்ளார் 
காரைக்குடி தோழர்களே இப்பொழுதும் ஒன்றும் குறைந்துவிடவில்லை காலம் கடந்து விடவில்லை தோழர் ஆரோக்கியசாமி அவர்களின் குடும்பத்திற்கும் அனைத்து சலுகைகளும் கிடைக்க வழிவகை உள்ளது.கடலூர் தோழர் ஆனந்தன் அவர்களை அணுகினால் அனைத்து உதவிகளும் செய்ய தயாராகவுள்ளார் கவுரவம் பார்க்காதீர்கள்  உங்களை நம்பியவர்களை ஏமாற்றி விடாதீர்கள்.

                                                  இன்னும் பல தகவல்களுடன் 
                                                              K.மதிவாணன்  
                                                     மாவட்ட பொருளாளர்  
                                                           NFTCL -கடலூர்